பெண் காவலருடன் லிவிங் டுகெதர்: திடீரென தற்கொலைக்கு முயற்சித்த வாலிபரால் பரபரப்பு!
- IndiaGlitz, [Thursday,November 12 2020]
பெண் காவலர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வந்த வாலிபர் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த 25 வயது பிரபு என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில் காவல்துறையில் பணிபுரிந்த வைதேகி என்பவரை காதலித்துள்ளார். அதன்பிறகு வைதேகி திருவாரூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் இவரும் திருவாரூர் சென்று அங்கு லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வைதேகியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பிரபு, அவருடைய பெற்றோரிடம் பேசியதாகவும், ஆனால் வைதேகி குடும்பத்தார் திருமணத்திற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென வைதேகியும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் தனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்றும் எனவே நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு, வைதேகியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் வைதேகி பணிபுரியும் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக பிரபு புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
லிவிங் டுகெதர் முறையில் பெண் காவலர் ஒருவருடன் வாழ்க்கை நடத்தி வந்த வாலிபர் ஒருவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.