என் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஆரியும் பாலாஜியும் சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில் சண்டைக் கோழிகள் என பெற்ற இருவரும் வின்னராகவும், ரன்னராகவும் வந்து இருப்பது ஆச்சரியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் ரன்னராக தேர்வு பெற்ற பின் பாலாஜி முதல் முறையாக தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் ’இந்த அற்புதமான பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. அதேபோல் என் மீது சந்தேகம் வைத்திருந்து என்னை கடினமாகவும் நன்றாக வேலை செய்ய வைத்தவர்களுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில் ’மச்சான் தம்பி தங்கச்சி எல்லாருக்கும் நன்றி. நான் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போது வெளியே இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களே எனக்கு துரோகம் செய்தனர். ஆனாலும் நீங்கள் தான் எனக்கு தூணாக இருந்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சந்தோஷத்துடன் இந்த 105 நாட்களை அனுபவித்தேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி பதிவு செய்த முதல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com