மெர்சல் சென்சாருக்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் ரிலீசுக்கு முன்பு மட்டுமின்றி ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகள் மலைபோல் குவிந்தது. அவற்றில் ஒன்று இந்த படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'ஒரு படத்தின் வசனங்களை மக்கள் கண்மூடித்தனமாக நம்புவார்கள் என்பதை ஏற்கமுடியாது என்றும், தவறான கருத்தை சுட்டிக்காட்டுவதும் கருத்து சுதந்திரம்தான் என்றும் தெரிவித்தனர். எனவே இந்த மனுவை விசாரணை செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments