கமல் மீது வழக்கு! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ஏற்கனவே உத்தரபிரதேச மாநில நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டிலும் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட், இதுகுறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணையின்போது தமிழக காவல்துறை இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.