அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. கடந்த வாரம் 'மெர்க்குரி' படமும் இந்த வாரம் தியா, பக்கா மற்றும் பாடம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய படங்கள் வெளியீட்டுக்கு ஒரு குழு அமைத்துள்ளது என்பதும், அந்த குழு ஒவ்வொரு வாரமும் பரிந்துரை செய்யும் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த குழுவினர் பரிந்துரையின்படி அடுத்த வாரம் அதாவது மே 4ஆம் தேதி 'இருட்டு அறையில் முரட்டு குத்து, 'அலைப்பேசி’, ’காத்திருப்போர் பட்டியல்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
அதேபோல் மே 11ஆம் தேதி ’இரும்புத்திரை’, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கிடையில் கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' திரைப்படம் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தெலுங்கு டப்பிங் என்பதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஒவ்வொரு வாரம் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரையின்படி ரிலீசாகும் படங்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com