'தி லெஜண்ட்' படத்தின் வாடிவாசல் பாடல்: செம கலர்புல் என குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Friday,May 20 2022]

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட்’ சரவணன் நடிப்பில் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ’வாடிவாசல்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. ஏராளமான துணை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், அற்புதமான செட் என கலர்புல்லாக இருக்கிறது என இந்த பாடலை பார்த்தவர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தயால் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார் என்பதும் இவர் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

விமானம் பறக்க… 5 நிமிட கரகோஷத்தில் நனைந்த நடிகர் டாம் குரூஸ்… நெகிழ்ச்சி தருணம்!

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

'வாயாடி பெத்த புள்ள' ஆராதனா பாப்பா இப்படி வளர்ந்துட்டாங்களே: லேட்டஸ்ட் புகைப்படம்!

'வாயாடி பெத்த பிள்ளை' என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாப்பா கிடுகிடுவென வளர்ந்துள்ளது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது .

குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன்: உடன் சென்ற நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிரபல நடிகை, பிரபல நடிகர் மற்றும் சிலரும் சென்றுள்ளனர். 

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .

மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் இசையமைப்பாளர்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஒருவர் தனது மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது