மாஸ் நடிகர்களுக்கு இணையாக 4 மணி காட்சி: அசத்தும்  'தி லெஜண்ட்' திரைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,July 20 2022]

தமிழகத்தை பொறுத்தவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாலை 4:00 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் அறிமுக நடிகரான அருள் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 4 மணி காட்சி திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரபல தொழிலதிபர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’ வரும் 28ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் பிரமாதமான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிகாலை 4:00 காட்சியை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

இதுவரை ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே நான்கு மணி காட்சி திரையிடப்பட்ட நிலையில் தற்போது மாஸ் நடிகர்களுக்கு இணையாக சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 4 மணி காட்சி திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளதும் என்பதும், இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.