சிங்கப்பூர் மலேசியாவில் புரமோஷன்: கிழிந்த ஜீன்ஸ் கிளாமரில் 'தி லெஜண்ட்' நாயகி!

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ’தி லெஜெண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்திற்கு தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தற்போது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘தி லெஜண்ட்’ படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்.

ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்து புரமோஷன் செய்து வரும் ஊர்வசி சற்று முன் புரமோஷனுக்காக விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிளாமராக காட்சியளிக்கும் அவரது தோற்றம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? வைரலாகும் வீடியோ

விஜய் டிவி சீரியல்களில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் மற்றொரு வீடியோ

பிரபல நடிகருடன் நித்யா மேனன் திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

பிரபல மலையாள ஹீரோ ஒருவரை நித்யாமேனன் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து நித்யாமேனன் விளக்கமளித்துள்ளார்.

நகுல் மனைவி கன்னத்தில் பளாரென விழுந்த அறை: அடித்தது யார் தெரியுமா?

நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி கன்னத்தில் பளாரென விழுந்த அறை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சமீபத்திய பரபரப்பு தொடரின் சீசன் 2

பரம்பரா.. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உருவாக்கிய பரபரப்பு. முதல் சீசன் ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து தற்போது

நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா? இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் திரைப்படங்களிலும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்கள் தெலுங்கு,