விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்:  'தி லெஜண்ட்' அண்ணாச்சி தகவல்

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் - இந்தியா மொழி திரைப்படமாக வெளியான ‘தி லெஜண்ட்’ வெற்றியை அடுத்து இன்று சென்னையில் தமிழ் ஊடகங்கள் உடனான சந்திப்பு நடந்தது.

அருள் சரவணன் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியதாவது: ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ விழா தற்போது சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்த உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. மீடியாவின் சப்போர்ட் எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது: ‘ஊடக நண்பர்களுக்கு வணக்கம்… உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி!!! விரைவில் சந்திக்கிறேன்…சந்திக்கிறோம்… என்று பதிவு செய்துள்ளார்.