பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்.. வெங்கட் பிரபு உருக்கம்.!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது சகோதரரும் இயக்குனருமான வெங்கட் பிரபு, பவதாரிணி உடன் எடுத்த கடைசி புகைப்படம் என உருக்கமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி சமீபத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களுக்கும், இளையராஜா குடும்பத்தினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பவதாரிணி உடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதில் பவதாரணியின் தலையில் முத்தம் கொடுப்பது போல் இருக்கும் ஒரு புகைப்படமும் இன்னொரு புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி உடன் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் உள்ளது.

இந்தப் புகைப்படத்திற்கு உருக்கமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும், சகோதரியை இழந்து வாடும் வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.