திடீரென பிங்க் நிறத்தில் மாறிய ஏரி: காரணம் தெரியாமல் குழம்பிய விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க லோனார் ஏரி பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியிருக்கிறது. இதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது குறித்த விளக்கம் அளிக்க முடியாத விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தில் உள்ளது லோனார் ஏரி மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வானில் இருந்து கீழே விழுந்த எறிகல் ஏற்படுத்திய பள்ளம் தான் பின்னாட்களில் ஏரியாக உருவாக்கப் பட்டது என நிலவியல் வல்லுநர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1823 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் என்பவர் தான் இந்தப் பள்ளத்தை ஏரியாக உருவாக்கியதாகவும் தரவுகள் கூறுகின்றன. மேலும் பத்ம புராணம், கந்த புராணம், அய்னி இ அக்பரி போன்ற நூல்களிலும் ஏரி குறித்த தகவல்கள் கூறப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஏரி கடந்த வாரம் முதல் பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறிவிட்டதாக புல்தானா மாவட்டத்தின் ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், மகாராஷ்டிரா மாநில சுற்றுலா கழகமும் லோனார் ஏரி பிங்க் நிறமாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டி சிலப் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான காரணத்தை தற்போது மைக்ரோ பாயாலஜிட் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டு வருகின்றன. மேலும் இந்த ஏரி மனிதர்களால் பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்பு தன்மை வாய்ந்தது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏரி நீரின் 1 அடி ஆழத்திலேயே ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து காணப்படும் எனவும் கூறப்படுகிறது. இங்குள்ள நீரின் BH அளவு 10.5% என்பதும் குறிப்பிடத்தக்கது. 1.8 கிலோ மீட்டர் விட்டமும் மற்றும் 150 மீட்டர் ஆழமும் கொண்டது இந்த ஏரி.
சில புவியியல் வல்லுநர்கள் “லோனார் ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்கு முன்பும் மாறியுள்ளது என்றாலும் பிங்க் நிறத்தில் முழுமையான மாறியுள்ளது இதுதான் முதல் முறை, இந்த ஏரி உப்பு ஏரியாகும். மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள் மற்றும் உப்புத் தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் சில ஆண்டுகளாக மழை குறைந்து காணப்படுகிறது. மழை குறைவாக இருப்பதால் பாசிகள் தொடர்ந்து உயிர் வாழ்வது கடினம். பாசிகள் இல்லாததால் பச்சைத் தன்மை காணாமல் போயிருக்கலாம். மேலும் மழை நீர் ஏரியில் கலக்காததால் நீரிலுள்ள உப்பின் அளவும் அதிகரித்து இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தற்போது ஏரி பிங்க் நிறமாக மாறியிருக்கும் என்ற விளக்கத்தையும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout