மும்பை வெள்ளம்: 5 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் துப்புரவு பணியாளர்
- IndiaGlitz, [Saturday,August 08 2020]
மும்பையில் ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள செய்திகள் வெளிவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன
இந்த நிலையில் மேற்கு மும்பையில் உள்ள துள்சி பைப் என்ற சாலையில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் சாலையில் தண்ணீர் போவதற்கான உள்ள பள்ளத்தின் அருகில் நின்றுகொண்டு அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி இருந்துள்ளார்.
சாலையில் வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் யாரும் அந்த பள்ளத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பள்ளத்தின் அருகிலேயே 5 மணி நேரம் அவர் வெள்ள நீரில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் குறித்து எச்சரிக்கை செய்து வழிகாட்டியாக இருந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தன்னுடைய உடல் நிலையையும் பொருட்படுத்தாது பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 மணி நேரம் தண்ணீரில் நின்று வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்த அந்த பெண் துப்புரவு பணியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
This video is from Tulsi Pipe Road in Matunga West, Mumbai. The lady seen in the video had been standing beside the open manhole for five hours to warn commuters driving on the road.
— The Better India (@thebetterindia) August 7, 2020
VC: Bhayander Gudipadva Utsav pic.twitter.com/FadyH175mY