'மாஸ்டர்' ஆடியோ விழாவில் உலகத்தையே கலக்கிய நடன பிரபலங்கள்: ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Sunday,March 08 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஆடியோ விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய வீட்டில் உட்கார்ந்தபடியே இந்த ஆடியோ விழாவை பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆடியோ விழாவில் பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி நடன போட்டியான ‘வேர்ல்ட் ஆஃப் டான்ஸ்’ என்ற நடன போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவின் ’தி கிங்ஸ்’ குழுவினர் நடனமாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெனிஃபர் லோபஸ் உள்பட மூன்று பிரபலங்கள் நடுவராக இருந்த இந்த நடன நிகழ்ச்சியில் இந்தியாவின் ’தி கிங்ஸ்’ குழுவினர்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்தது என்பதும், அத்தகையை பெருமைக்குரிய ‘தி கிங்ஸ்’ நடனக்குழுவினர் தற்போது ’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழாவில் நடனமாட இருப்பது விஜய் ரசிகர்களுக்கான ஒரு நடன விருந்தாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக வந்த செய்தியால் சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் முதல் அப்டேட் தற்போது வெளிவந்து விட்டது 

'டிசைன் டிசைனா அப்டேட்':'மாஸ்டர்' கொண்டாட்டம் ஆரம்பம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இண்டர்நெட்டை கலக்கும் கீர்த்தி பாண்டியனின் நீச்சலுடை புகைப்படங்கள்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் 'தும்பா' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் அவர் தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து

இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்: கலைப்புலி எஸ்.தாணு

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான 'சிறைச்சாலை' என்னும் பிரமாண்டமான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்: காங்கிரஸ் எம்பி அதிரடி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும் விரைவில் அவர் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை வெளியிடுவார்