பொதுத்தேர்வு எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட கிட்னாப் பிளான் – கடைசியில் சொதப்பியது
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது எல்லா மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ஜுரம் படாய் படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். வீட்டை விட்டு ஓடி விடுவது, தேர்வு அறைக்கு பிட் பேப்பர் கொண்டு செல்வது என மாணவர்கள் தேர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள பல முயற்சிகள் செய்து வருவதைச் செய்திகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. தேர்வில் இருந்து தப்பிக்க பிட் பேப்பரை கொண்டு செல்வதெல்லாம் சின்ன புள்ளைத் தனம் என்று நம்பிய ஒரு மாணவன் தற்போது குழந்தையைக் கடத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரினா மாவட்டத்தில் உள்ள துடிலா கிராமத்தில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவன் ரன்பீர் பொதுத் தேர்வுக்கு செல்லாமல் இருப்பதற்கு ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கிறான். அதன்படி உறவினர் ஒருவரின் 3 வயது குழந்தையைக் கடத்தி கை, கால்களை கட்டி ஒரு இடத்தில் வீசி விட்டு சென்றிருக்கிறான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரன்வீர் காலையில் எழுந்தவுடன் தேர்வுக்கு செல்ல விரும்பாததால் அவசரமாக ஒரு கடிதத்தை எழுதி, தன் வீட்டில் வைத்து விட்டான். உறவினர் ஒருவரின் 3 வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்ற பின்பு குழந்தைகயின் கை, கால்களை கட்டி ஒரு இடத்தில் தனியாக விட்டுவிட்டான்.
வீட்டில் குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ரன்வீரையும் காணாததால் பதட்டமடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ரன்வீர் வீட்டை சோதனை செய்த போலீசார் ரன்வீர் எழுதிய கடித்தத்தை கண்டுபிடித்தனர். அக்கடிதத்தில், “குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்றால் ரன்வீர் உடனே வரவேண்டும்” இப்படி இருந்தது. இதைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து சென்று தனியாக விடப் பட்டு இருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
மாயமான ரன்வீரை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொதுத்தேர்வு எழுதுவதற்கு பயமாக இருந்தது, தேர்வு எழுதாமல் தப்பிக்க இப்படி செய்தேன் என்று ரன்வீர் தெரிவித்து உள்ளார். தற்போது பொதுத் தேர்வு என்றாலே மாணவர்கள் மத்தியில் பயம் தலைக்கேறி விடுவது கவலை அளிக்கிறது. தேர்வுகள் மாணவர்களின் அறிவுத் திறனை சோதனை செய்வதற்குத் தான் என்பதை இச்சமூகம் உணர்ந்து கொண்டிருந்தால் இந்த பிரச்சனையைத் தவிர்த்து இருக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout