வசூலில் சாதனை செய்த 'தி கேரளா ஸ்டோரி'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய திரை உலகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதீப்சென் இயக்கத்தில் உருவான ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மே ஐந்தாம் தேதி வெளியானது. இந்த படம் கேரளாவில் உள்ள ஹிந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், கதையம்சம் கொண்டதாக அமைந்தது.
உண்மை கதை என்று கூறப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் என்ற படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த படம் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் 300 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் வரும் 16ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
These questions keep haunting Shalini. Watch her story unfold soon! #TheKeralaStory premieres on 16th February, only on #ZEE5#TheKeralaStoryOnZEE5 #VipulAmrutlalShah #TheKeralaStory #SaveOurDaughters@sudiptoSENtlm @Aashin_A_Shah @sunshinepicture @adah_sharma… pic.twitter.com/04QjjDjlPK
— ZEE5 (@ZEE5India) February 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments