வசூலில் சாதனை செய்த 'தி கேரளா ஸ்டோரி'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

இந்திய திரை உலகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதீப்சென் இயக்கத்தில் உருவான ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மே ஐந்தாம் தேதி வெளியானது. இந்த படம் கேரளாவில் உள்ள ஹிந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், கதையம்சம் கொண்டதாக அமைந்தது.

உண்மை கதை என்று கூறப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் என்ற படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த படம் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் 300 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 16ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விவாகரத்தாகி 3 வருடங்கள் கழித்து துணையை கண்டுபிடித்துவிட்டேன்: சன் டிவி சீரியல் நடிகை அறிவிப்பு..!

சன் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்த நடிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது புதிய துணையை கண்டுபிடித்துவிட்டேன்

நடிகை மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறிய பிக்பாஸ் நடிகை.. முதல் கட்ட திட்டம் இதுதான்..!

நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி, திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளதாக அறிவித்துள்ளதோடு

அரசியல் கட்சி ஆரம்பிச்சாச்சு.. அடுத்தது இதுதான்.. விஜயகாந்த் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையா?

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அடுத்ததாக தனது பெயரில் டிவி சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும்

ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே: ஷிவானி நாராயணன் வீடியோ..!

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த கட்டேரா பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்..

ZEE5  தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான "கட்டேரா"  படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது