'தி கேரளா ஸ்டோரி': ஓடிடியில் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தினை, உலகளவில் ZEE5 தளம் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு அழுத்தமான படைப்பாக அனைவராலும் பாராட்டைப் பெற்றது. பிப்ரவரி 16 ஆம் தேதி உலகம் முழுக்க டிஜிட்டல் வெளியீடாக வெளியான இப்படம், வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைத் தாண்டியது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் தென் பகுதியில் குறிப்பாகத் தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனைப் படைத்துள்ளது.
விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம், கேரளாவில் இளம் இந்துப் பெண்களை தீவிரவாதிகளாக ஆக்கி, மதமாற்றம் செய்வதாக கூறப்படும் உண்மைச் சம்பவங்களை சுற்றி, அமைக்கப்பட்ட அழுத்தமான படைப்பாகும்.
இப்படம் திரையரங்கில் வெளியான போது, பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது டிஜிட்டல் வெளியீட்டிலும் அதன் வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. உலகளாவிய பார்வையாளர்களுக்கு சிறப்பான படைப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கி வரும் ZEE5 இன் மகுடத்தில் மற்றொரு கிரீடமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து நடிகை அடா ஷர்மா கூறுகையில்.., “ZEE5 இல் கேரளா ஸ்டோரி படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் பல சாதனைகளைச் செய்தது, இப்போது OTT யிலும் பல சாதனைகளைச் செய்து வருவது மகிழ்ச்சி. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பலர் இப்படத்தின் வாயிலாக எங்களுக்கு அவர்களின் இதயத்தில் நிரந்தர இடத்தைத் தந்துள்ளனர். பார்வையாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாகப் படத்தைப் பார்ப்பதாக வரும் செய்திகள், பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொருவரையும் கவரும் அழுத்தமான இப்படத்தினை ZEE5 உலகம் முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! "
மிகச் சக்தி வாய்ந்த கதையுடன், நம் சிந்தனையை தூண்டி விடும், கேரளா ஸ்டோரி ZEE5 இல் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்று, வரவேற்பை குவித்து வருகிறது. வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments