'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு..?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ’தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் காணாமல் போன இளம் பெண்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது என்பதும் பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை அடா சர்மா. இந்த படத்தில் நடித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூட அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவர் ஏற்கனவே சிம்புவின் ’இது நம்ம ஆளு’ பிரபுதேவாவின் ’சார்லி சாப்ளின் 2’ உள்பட பல ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை அடா சர்மாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வயிற்றுப்போக்கு உணவு அலர்ஜி பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments