நடிகர் சங்க தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வெளியாகியது. அந்த தீர்ப்பில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடந்தது என்பதும் இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜை தலைமையைக் கொண்ட சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிட்டன.

இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்குகள் இன்னும் நான்கு வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.