தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் இந்த தீர்ப்பை மத்திய அரசு மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை சர்ச்சைக்குரிய இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலா அவர்கள், ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்கூடாது என்றும், தீர்ப்பின் முழு விபரத்தை படித்தபின் சீராய்வு மனு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.,
 

More News

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்க தொடங்கிய நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பில் முதலில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஏகமனதாக ஏற்று தீர்ப்பு அளிக்கின்றனர்.

ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா!

நடிகர் விஷாலுடன் தமன்னா நடித்த 'ஆக்சன்' திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழக முதல்வருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன காரணம்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மாலை சந்தித்தார்.

'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு இளம் நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.