தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்
- IndiaGlitz, [Saturday,November 09 2019]
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் இந்த தீர்ப்பை மத்திய அரசு மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை சர்ச்சைக்குரிய இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலா அவர்கள், ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்கூடாது என்றும், தீர்ப்பின் முழு விபரத்தை படித்தபின் சீராய்வு மனு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.,