நீண்ட நாட்களுக்கு பின் சந்தோஷமாக இருக்கின்றேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு

சமீபத்தில் கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’முசாஃபர்’ என்றும் மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த மியூசிக் ஆல்பத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருப்பதாகவும் நீண்ட நாட்களுக்கு பின்னர் கேமராவை இயக்குவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மியூசிக் ஆல்பத்திற்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணிபுரியவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய்ய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குநராகப் பணிபுரிந்தார் என்றும் அந்த பாடலில் உள்ள நடன அசைவுகள் உலக அளவில் ஹிட்டாகி உள்ளது தெரிந்ததே.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மியூசிக் ஆல்பத்திற்கு அவர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளதை அடுத்து அந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்: கே.பாக்யராஜூக்கு செல்வமணி தரப்பு பதிலடி!

பிப்ரவரி 27ஆம் தேதி இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், செல்வமணி தலைமையிலான புது வசந்தம் என்ற அணியும்

'ஏதோ என்னால முடிஞ்சது: 'அரபிக்குத்து' பாட்டுக்கு ஷிவாங்கியின் டான்ஸ்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்; படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே .

செஸ் போட்டியில் உலகச் சாம்பியனையே வீழ்த்திய சென்னை சிறுவன்…. குவியும் பாராட்டு!

உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் நார்வே நாட்டைச்

எலான் மஸ்க்கின் புதிய காதலி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார கார் உற்பத்தி பற்றிய தகவல்கள்

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி