'விஐபி 2' படத்தை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் நடித்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இம்மாதம் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையியில் தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் 'The Extraordinary Journey of the Fakir' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். எனவே இந்த படமும் இவ்வருட இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்டாலின், ஓபிஎஸ் உடன் கமல் கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் சந்தேகம்

உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் விஸ்வரூபம் ஆரம்பித்துவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களை கண்டால் நடுங்கும் நடிகர்களின் மத்தியில் கமல்ஹாசனின் ஒவ்வொரு அறிக்கையும் பேட்டியும், தமிழக ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது...

சாருஹாசன் படக்குழுவினர்களுக்கு ஆச்சரியம் அளித்த கீர்த்திசுரேஷ்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கீர்த்திசுரேஷ், ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே...

முதல்படியை தாண்டியது சிவகார்த்திகேயனின் வெற்றி கூட்டணி

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக மாஸ் ஓப்பனிங் படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்...

தம்பி ஜெயகுமார், எலும்பு வல்லுனர் எச்.ராஜா: கமல்ஹாசனின் அதிரடி பதில் அறிக்கை

உலக நாயகன் கமல்ஹாசனின் ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கு தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் 'கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து தைரியமாக கருத்தை சொல்லட்டும் என்றும், கமல்ஹாசன் முதுகெலும்பில்லாதவர் என்று எச்.ராஜாவும் விமர்சனம் செய்தனர்...

ரஜினி கட்சி, கமல் கட்சி யாருக்கு ஆதரவு? விஷால் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன் ரசிகர்களை சென்னையில் சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார்.