தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபரான நடிகை நளினி, சமீபத்தில் ஒரு இதயப்பூர்வமான நேர்காணலை வழங்கினார்.
- IndiaGlitz, [Friday,March 01 2024]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மம்முட்டி மோகன்லால்,விஜயகாந்த்,சத்யராஜ்,மோகன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நகைச்சுவை நடிகை மற்றும் தயாரிப்பாளர்,
ராணி என்ற இயற்பெயருடன் 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் பிறந்த நளினி, தந்தை நடன இயக்குனராகவும் ,தாய் நடன கலைஞராகவும் இருப்பதால்,தானும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு நடனத்தில் உள்ள அத்தனை முறைகளையும் கற்று தேர்ந்து சிறந்து விளங்கினார்.நடிகை நளினி அவர்கள், அவள் Glitz யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,
எனக்கு மொத்தமாக உடன் பிறந்த சகோதரர்கள் ஏழு பேர்.சினிமாவில் பெரிதாக ஆர்வமோ அல்லது ஆசையோ இல்லை. சினிமாவில் பொய் முகம் ஒன்று இருப்பதாக எனக்கு எப்போதுமே தோன்றும் .நடனம் மட்டுமே எனது விருப்பமாக இருந்தன.அனால் என் அம்மாவுக்கு சினிமாவில் நான் நடிக்க வேண்டும் என்பதே ஒரு பெரிய கனவாக இருந்தன.
மிகவும் சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன்.அதனால் எட்டாம் வகுப்புடன் எனது படிப்பு பாதிலியே நின்று போனது.சிறு வயதில் கிடைக்கும் அனைத்து உற்சாகங்களும் சந்தோஷங்களும் எனக்கு கிடைக்கவே இல்லை.அந்த மாதிரியான பள்ளி பருவ காலங்களை நான் எப்போதும் மிஸ் பண்ணுவேன்.பிறகு என்னோட 21வயசுக்குள்ளயே நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முடித்தேன்.முக்கிய கதாபாத்திரம் மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்தேன்.
நான் நடித்த பல படங்களில் ராமராஜன் துணை இயக்குனராக பணியாற்றினார்.எத்தனையோ முறை மறைமுகமாக அவர் காதலை தெரிவித்த நிலையில் தெரிந்தும் தெரியாமல் போல அது ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது.இந்த விஷயம் தெரிந்த என் தாயார் என்னை தமிழ் சினிமாவில் நடிக்க விடாமல் முழுக்க முழுக்க மலையாள சினிமாவில் நடிக்குமாறு கூறி விட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அவார்ட் தரும் விழாவில் கலந்து கொண்டபோது மீண்டும் அவரை சந்தித்தேன். பிறகு இருவரும் பேசி மனம் ஒற்று போகி திருமணம் செய்து கொண்டோம்.மிகவும் அழகாக சென்ற வாழ்க்கை ஒரு நேரத்தில் கசப்பாக மாறி இருவரும் பரஸ்பரமாக பேசி விவாகரத்து செய்து கொண்டோம்.
இருந்தாலும் என் கணவர் மிகவும் தன்னம்பிக்கை உள்ள மனிதர். விவாகரத்துக்கு பிறகு தான் நான் என் வாழ்க்கையை வாழவே தொடங்கினேன்.எனக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.பல பிரச்சனைகள் கசப்புகள் வருத்தங்கள் இருந்தாலும் அதை எல்லாம் கடந்து இன்றும் என் சினிமா பயணம் தொடர்கிறது என கூறினார் புன்னகையுடன்...