கமல்ஹாசனின் முதல் அரசியல் பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்
- IndiaGlitz, [Wednesday,February 21 2018]
இன்று காலை முதல் அனைத்து ஊடகங்களும் கமல்ஹாசனை நோக்கியே இருந்தது. அவருடைய வாழ்வில் மட்டுமல்ல, தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும் இன்று முக்கிய நாளாக கருதப்படுகிறது.
இன்று காலை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடைய சகோதரரிடம் ஆசி பெற்ற கமல், அவருக்கு நினைவுப்பரிசாக கைக்கடிகாரம் ஒன்றை அளித்தார்
பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்டிருந்தாலும், வெளியில் நின்று அந்த பள்ளியை பார்வையிட்டார். அவருடைய பார்வை அப்துல்கலாம் அவர்களையே கட்டித்தழுவியது போன்று இருந்தது
பின்னர் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்த கமல், மீனவர் பிரச்சனையை தீர்க்க தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் கூறியதாவது:
எங்களுக்கு பொன்னாடை போர்த்தும் வழக்கமில்லை: நான் தான் ஆடை என்று கூறி மேடையில் இருந்த மீனவர்களை கட்டிப்பிடித்தார் கமல் கலாமின் பள்ளிக்கு செல்வதைத்தான் தடுக்க முடியுமே தவிர, நான் பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான், அவர்களுடைய இல்லத்திலும் வாழ ஆசைப்படுகிறேன் மதுரையில் என் கொள்கைகளை புரியும்படி பேசுவேன் நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை; என்னுடைய நம்பிக்கை அப்படி. அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு கமலின் பதில் கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன்