பிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம் இதுதான்!

இன்று நாட்டு மக்களுக்கு முக்கிய விஷயம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் கூறிய நிலையில் அந்த முக்கிய விஷயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளதாகவும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளித்துறையில் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறி பெருமிதம் அடைந்த பிரதமர் மோடி, மிஷன் சக்தி’ சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் விளக்கம் அளித்தார். மேலும் விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது என்றும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.