'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அந்த ஏமாற்றம் தற்போது முடிவுக்கு வருகிறது.

ஆம், கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்திய் டிரைலர் தற்போது தயாராகிவிட்டதாகவும், டிரைலர் ரிலீஸ் தேதி வெகுவெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த டிரைலர் உலகநாயகன் டியூப் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கமல்ஹாசனின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.