2020ஆம் ஆண்டை எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்
- IndiaGlitz, [Friday,December 27 2019]
இன்னும் ஒரு சில நாட்களில் 2019ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்று 2020ஆம் ஆண்டு என்ற புத்தாண்டு பிறக்க உள்ளது. புதிய ஆண்டு பிறந்த உடன் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை என்னவெனில் தேதி எழுதும்போது ஆண்டை மட்டும் பழைய ஆண்டாக மாற்றி எழுதிவிடுவதுதான். இதுவரை 2019 என்று எழுதி பழக்கப்பட்ட நாம் திடீரென 2020 என்று எழுதுவதற்கு சில சமயம் மறந்துவிடுவோம்.
இந்த நிலையில் இதுவரை நாம் ஆண்டை எழுதும்போது கடைசி இரண்டு இலக்கங்களை மட்டும் எழுதி வருவது வழக்கமாக இருந்துள்ளது. உதாரணமாக 01.01.19 என்று எழுதினால் அது 2019 என்றுதான் அர்த்தம் விளங்கி கொள்ளப்படும். ஆனால் இனி வரும் ஆண்டு மட்டும் 2020 ஆம் ஆண்டு என முழுமையாக எழுதி பழக வேண்டும். அப்பொழுதுதான் முறைகேட்டுக்கு வாய்ப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக 01.01.20 என 2020க்கு பதில் 20 என சுருக்கமாக எழுதினால் அந்த 20க்குபின்னால் ஏதாவது ஒரு எண்ணை எழுதி ஆண்டை மாற்ரிவிட முடியும். அதாவது 01 முதல் 99 வரை ஏதாவது ஒரு எண்ணை இணைத்து முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த ஒரு ஆண்டு மட்டும் 2020 என முழுமையாக எழுதும்படி அறிவுறுத்தப்படுகிறது.