'தூக்குதுரை' வரலாறு தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்தில் அவருடைய கேரக்டரில் ஒன்று 'தூக்குதுரை என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 'தூக்குதுரை' வரலாறு குறித்து தற்போது பார்ப்போம்.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் வாழ்ந்த ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனையின் பின்புறம் மகாதேவர் கோவில் என்ற கோவிலை கட்டி தினமும் வணங்கி வந்தனர். இந்த மகாதேவர் கோவிலில் உள்ள ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர் சிலை வடக்கு நோக்கி உள்ளது. முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில் வார்டனைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆங்கிலேய அரசால்  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 17.10.1884ஆம் ஆண்டு தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை இந்த கோவிலில் செய்யப்பட்டது.

இதுவரை தூக்குதுரை என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பெயர் கூகுளில் வைரலாகி இவருடைய வரலாறை அனைவரும் அறிந்து வருகின்றனர். 'விஸ்வாசம்' படத்தின் கதையும் இந்த நிஜ தூக்குதுரை கதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் குருநாதர் மற்றும் இயக்குனர் சிகரமுமான கே.பாலசந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் மரணம் அடைந்தார்

தூக்குத்துரைன்னா அடாவடி: 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் விமர்சனம்

அஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் ஒரு கட்டத்தைல் அஜித் ரசிகர்கள்

'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷூக்கு கமல் இரங்கல்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.