விசித்ரா, யுகேந்திரன், ரவீனாவை விட அதிக சம்பளம்.. ஆனால் இப்படி ஆயிருச்சே..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் சண்டை சச்சரவுடன் விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக பிக் பாஸ் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள், பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இடையே ஏற்படும் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசனுக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீசனில் பிரபலமானவர்கள் அதிகமாக இல்லை என்பதால் போட்டியாளர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் யுகேந்திரன், ரவீனா, விசித்ரா, ஜோவிகா போன்றவர்களுக்கு அதிக சம்பளம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் இன்னும் கசியவில்லை என்றாலும் தற்போது அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒரு எபிசோடுக்கு ரூ.28,000 என்று சம்பளம் பேசப்பட்டவர் பவா செல்லதுரை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் எதிர்பாராத காரணத்தினால் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அவர் மட்டும் கிட்டத்தட்ட 90 நாள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்திருந்தால் லட்சக்கணக்கில் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவர் வெளியேறிவிட்டது துரதிஷ்டமாகவே கருதப்படுகிறது.

பவா செல்லத்துரையை அடுத்து ஒரு எபிசோடுக்கு ரூபாய் 27000 என்று யுகேந்திரனுக்கு பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் விரைவில் கசியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.