ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.. தி குரூப் நிறுவனம் விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,September 28 2023]

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தி தரவில்லை என்றும், பணமும் திருப்பி தரவில்லை என்றும் அறுவை சிகிச்சைகள் நிபுணர்கள் சங்கம் நேற்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து தி குரூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

2018ஆம் ஆண்டு ASICON 2018 Chennai என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் பேசி அனுமதி பெற்றோம்.

இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலை என இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள்.

அந்த சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட அனைத்து விஷயங்களும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு கையெழுத்தானது.

ASICON 2018 CHENNAI நிகழ்வில் அதிக தொகை செலவிட இருந்ததால் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழலல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட 25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை இந்த புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அந்த அமைப்பினர் காசோலை கொடுத்ததாக குறிப்பிடுவது வேறு நிகழ்ச்சிக்கானது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்க தேவையில்லை.

எங்கள் நிறுவனத்தின் (The Group) மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும், அந்த அசோசியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர்வோம்” இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

13 வருடங்களுக்கு பின் கிடைத்த நாற்காலி.. செளந்தர்யா ரஜினிகாந்த் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் ஏற்கனவே 'கோச்சடையான்' மற்றும் 'விஐபி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பதும், 'கோவா' என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

நள்ளிரவில் வெளியான 'லியோ'வின்  'Badass' புரமோ.. இன்று மாலை ஒரு சம்பவம் இருக்குது..!

தளபதி   விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அதிருப்தியில் இருக்கும்

'லியோ' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'லியோ'  திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

சாண்டி மாஸ்டரை வேற லெவலுக்கு மாற்றிய 'லியோ' லோகேஷ்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழில் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் டிவி புகழ் வீட்டிற்கு வந்த மகாராணி.. வைரல் புகைப்படம்..!

விஜய் டிவி புகழ் மற்றும் அவரது நீண்ட கால தோழி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.