ரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....! அதிரடி காட்டும் அரசு...!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

ரெம்டெசிவர் மருந்திற்கு தட்டுப்பாடு இருப்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு  நேரடியாக விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் படுக்கைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவர்  மருந்து என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. ரெம்டெசிவர்  மருந்தானது அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலமும், தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மூலமும் கிடைப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ரெம்டெசிவர்  மருந்து வாங்க உறவினர்கள் வரிசையில் காத்திருந்து பெற்றுச்செல்கின்றனர்.

காலை முதல் மருந்து வாங்க வரிசையில் நின்று மக்கள் சிரமப்படுவதாலும்,  மருந்து வாங்க வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் மற்றவர்களை பாதிக்கும் என்பதால் அரசு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது.



இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  இனி தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே, நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து  வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் மருத்துவமனைகள் இதுகுறித்து வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக,  இணையதள பதிவு முறை கொண்டுவர  இருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

வருகின்ற 18-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும்,  தங்கள் மருத்துவமனையில் கோவிட் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும்  நோயாளிகளின் விவரங்களை குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சிகிச்சை பெறும்  நோயாளிகளில், ரெம்டெசிவர்  மருந்து தேவைப்படும் நோயாளிகளின் விவரங்கள் குறித்தும் இணையத்தில் பதிவிட வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையதளம் 2 நாட்களில் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு, சரியான முறையில் மருத்துவமனையே நேரடியாக மருந்தை வழங்கும்.  இதில் சட்டவிரோதமாகவும்  மருந்துகளை விற்பனை செய்ய முடியாது.  தனியார் மருத்துவமனைகளில் விற்கப்படும் மருந்துகள், நோயாளிகளுக்கு நேரடியாக அளிக்கப்படுகின்றனவா என்பதும் அதில் கண்காணிக்கப்பட்டு வரும். இதனால் ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் விற்பனை செய்வதில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என அரசு சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்...! முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...!

குறிப்பிட்ட ஜாதியினரை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தியதால்,  பெரியோர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்

கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி..?

மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....! தடை விதித்த அரசு...!

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில்,  தனிமைப்படுத்தி  இருக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்!

பிக்பாஸ் தமிழ் போலவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி

அது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கங்கையில் பிணங்கள்