கிரிக்கெட் கடவுளை சந்தித்த இசைக்கடவுள்: அபூர்வ சந்திப்பின் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சாதனையாளரை இசை உலகின் கடவுள் என்று போற்றப்படுபவர் சந்தித்துள்ள அபூர்வ சந்திப்பின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் கடவுள் போன்று இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் என்பதும், அவர் கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் அவரது பேட்டிங் ஸ்டைல் ரசிகர்களின் கண்ணுக்குள்ளே இருக்கிறது.
அதேபோல் இசை உலகில் கடவுள் என்று போற்றப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் என்பதும் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த அவர் பல புதிய பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்பளித்து பலரது குடும்பத்திற்கு ஒளி விளக்கு ஏற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரை இசை உலகின் கடவுள் என்று போற்றப்படும் ஏஆர் ரகுமான் சமீபத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அபூர்வ சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’சச்சின்: ஏ மில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hanging out with the #master-blaster @sachin_rt #friendshipgoals #mcabandraclub pic.twitter.com/KOpMQuo5uW
— A.R.Rahman (@arrahman) October 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com