ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் வாகனத்தைப் பார்த்தவுடன் அத்தொழிலாளி தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார். மாஸ்க் அணியவில்லை என்ற அச்சத்தால் போலீஸாரைப் பார்த்தவுடன் தொழிலாளி இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட போலீஸார் ஆடுகளை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று இருக்கின்றனர். தனது ஆடுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு காவல் நிலையத்திற்குச் சென்று தொழிலாளி கேட்டு இருக்கிறார்.
அப்போது நீ ஏன் மாஸ்க் அணியாமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய், உனக்கு மட்டுமல்ல இனிமேல் ஆடுகளுக்கும் மாஸ்க் போட்டுத்தான் வெளியே அழைத்து வரவேண்டும் என அச்சுறுத்தி இருக்கின்றனர். இதைக்கேட்ட தொழிலாளி அதிர்ந்து போயிருக்கிறார். இதுகுறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout