வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார். அனாதையாக இருந்த அந்த பெண் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த பெண் குழந்தைக்கு ஜோதி என்ற பெயரிட்டார். அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் திருமணம் கூட செய்யவில்லை. காய்கறி வியாபாரம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் ஜோதியை படிக்க வைத்தார். காய்கறி வியாபாரியின் கடின உழைப்பால் நல்ல முறையில் வளர்ந்த ஜோதி கடந்த 2013ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அசாம் பப்ளிக் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். ஜோதியின் வளர்ச்சியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் விட்ட காய்கறி விபாயாரியை தற்போது ஜோதி கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.
சோபேரன் என்ற அந்த காய்கறி கடைக்காரர் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது, சுரங்கத்தில் கண்டெடுத்த வைரம் போல் நான் ஜோதியை குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தேன். ஜோதியால் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது. ஜோதியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout