தந்தையை இழந்த சிறுமி....செய்த நெகிழ்ச்சி காரியம்...! அந்த மனசு தான் சார் கடவுள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது தந்தையை இழந்த சிறுமி செய்த நெகிழ்ச்சியான செயல், பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிதானா. தனது தந்தையின் மருத்துவசெலவிற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கோவில்பட்டியை, ராஜீவ் நகரைச் சேர்ந்தவர்கள் நாகராஜ்- அமுதா தம்பதி. தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தை மாணவி சிறிது, சிறிதாக சேமித்து வைத்துள்ளார். இப்பெண்ணின் தகப்பனார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திடீரென இவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட, கையில் வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நாகராஜ்-க்கு திடீரென மாரடைப்பு, ஏற்பட அவர் உயிரிழந்தார். இதனால் தந்தையின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த, ரூ 1970-ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக எம்பி கனிமொழி வந்திருந்தார். அவரிடம் நிவாரண நிதி தொகையை வழங்கினார் சிறுமி.
இதனுடன் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ரிதானா, அதில் கூறியிருப்பதாவது,
"தன்னைப்போல யாரும் அப்பா,அம்மாவை இழந்து விடக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை இழந்திருந்தாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சிறுமி நிவாரண நிதி கொடுத்துள்ளதை, கனிமொழி எம்பியும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments