தந்தையை இழந்த சிறுமி....செய்த நெகிழ்ச்சி காரியம்...! அந்த மனசு தான் சார் கடவுள்...!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

தனது தந்தையை இழந்த சிறுமி செய்த நெகிழ்ச்சியான செயல், பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிதானா. தனது தந்தையின் மருத்துவசெலவிற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கோவில்பட்டியை, ராஜீவ் நகரைச் சேர்ந்தவர்கள் நாகராஜ்- அமுதா தம்பதி. தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தை மாணவி சிறிது, சிறிதாக சேமித்து வைத்துள்ளார். இப்பெண்ணின் தகப்பனார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திடீரென இவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட, கையில் வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நாகராஜ்-க்கு திடீரென மாரடைப்பு, ஏற்பட அவர் உயிரிழந்தார். இதனால் தந்தையின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த, ரூ 1970-ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக எம்பி கனிமொழி வந்திருந்தார். அவரிடம் நிவாரண நிதி தொகையை வழங்கினார் சிறுமி.

இதனுடன் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ரிதானா, அதில் கூறியிருப்பதாவது,

தன்னைப்போல யாரும் அப்பா,அம்மாவை இழந்து விடக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை இழந்திருந்தாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சிறுமி நிவாரண நிதி கொடுத்துள்ளதை, கனிமொழி எம்பியும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒரு நிமிஷத்தில் 11 மாடி கட்டிடம் இடிப்பு… காஸாவில் கணக்கே இல்லாமல் தொடரும் உயிரிழப்பு!

கடந்த மே 10 ஆம் தேதி முதல் பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் ஜெருசலேம் தலைநகர் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்?

குஜராத் மாநிலம் தெற்கு ராஜ்கோட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் எம்.பி காலமானார்...! அரசியில் கட்சியினர் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி இன்று வயது மூப்பினால் காலமானார்.

பயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து? எங்கு கிடைக்கும்?

கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் தூள் வடிவிலான 2DG எனப்படும் ஒரு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி