கள்ளச்சாரயத்தினால் தாய் தந்தையை இழந்த சிறுமி.அரசு நடவடிக்கை எடுக்குமா?

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை அதிகரித்து கொண்டே வருகிறது.மது அருந்தி இறந்த சுரேஷ்ன் துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் அங்கு விஷசாராயம் அருந்தி அதுவே இப்போது பலரின் உயிரை பலி வாங்கியுள்ளது.

இதில் மொத்தமாக 26 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரே நாளில் இத்தனை உயிரை பறித்த கள்ள சாராயத்தை தடை செய்யுமா இந்த அரசாங்கம்?

மது அருந்தி எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் நிற்கும் செய்தியை இன்று வரை நாம் பார்த்து கொண்டு தான் உள்ளோம்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலர் இறந்த நிலையில் இன்னுமே கவலை கிடமா சிலர் உள்ளனர்.மொத்தமாக 40 பேர் இறந்துள்ளனர்.இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்ட்டவரின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள படுகின்றன.

என்னவாக இருந்தாலும் மது அருந்தி போகும் உயிர்கள் இன்று வரையுமே தொடர்கின்றன.இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்பதை பாப்போம்.செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நம் பக்கத்தை தொடரவும்.