தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' நாயகிகள்

  • IndiaGlitz, [Thursday,July 07 2016]

தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' நாயகிகள்

பொதுவாக தமிழ் திரையுலகில் நாயகிகளின் காலம் மிகக்குறுகியது என்று கூறுவார்கள். ஒரு ஹீரோ நாற்பது, ஐம்பது வயதிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் டீன் ஏஜை தாண்டிய ஒருசில நாயகிகள் வாய்ப்பு இல்லாவிட்டால் அக்கா, அம்மா வேடத்திற்கு தயாராகிவிடுவார்கள் அல்லது திரையுலகை விட்டே காணாமல் போய்விடுவார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒருசில நாயகிகள் பல வருடங்களாக ஃபீல்டில் இருப்பதோடு புதியதாக அறிமுகமான ஹீரோயின்களுக்கு இணையாக பிசியாக இருப்பார்கள். அவ்வாறு 'என்றும் இளமை'யுடன் தமிழ் சினிமாவில் கோலேச்சிய ஒருசில நடிகைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஹேமாமாலினி:

இது சத்தியம்' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான தமிழ் நடிகையான இவர், தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்தாலும், பாலிவுட்டில் பலவருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தார். தற்போது அவருடைய வயது 67 என்பதுதான் உண்மை. ஆனால் நம்பமுடியாத அளவுக்கு இன்னும் இளமையாக தோற்றமளிக்கின்றார்.

ஸ்ரீதேவி:

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் 'மூன்று முடிச்சு' மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சுமார் பத்து வருடங்களும், பாலிவுட் திரையுலகில் சுமார் பத்து வருடங்களும் என சுமார் 20 வருடங்கள் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். தற்போது ஸ்ரீதேவி ஐம்பது வயதை தாண்டிவிட்டாலும் விஜய்யின் 'புலி' உள்பட இப்போதும் ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார்.

குஷ்பு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்மத்தின் தலைவன்' படத்தில் கடந்த 1988ஆம் ஆண்டு அறிமுகமான குஷ்பு, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். அதேபோல் பாலசந்தர், பாரதிராஜா உள்பட கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இயக்குனர்கள் படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பில் இருந்து விலகி அரசியல்வாதியாக மாறிவிட்டாலும் இன்னும் இன்றைய நாயகிகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவே காட்சியளிக்கின்றார்.

மீனா:

ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னாளில் அதே ரஜினிக்கு ஜோடியாக 'எஜமான்', வீரா' போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். கிட்டத்தட்ட தென்னிந்திய மொழி அனைத்திலும் நடித்துவிட்ட மீனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'த்ரிஷ்யம் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யாகிருஷ்ணன்:

இவரது பெயரை சொன்னாலே 'நீலாம்பரி' என்ற கேரக்டர் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது. கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்து தமிழ் திரையுலகில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன், சமீபத்தில் நடித்த 'பாகுபலி' உலக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நதியா:

கடந்த 80கள், மற்றும் 90களில் தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த நதியா, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நதியாவுக்காகவே ஓடிய படங்கள் பல. பிரபு நடித்த 'ராஜகுமாரன்' படத்திற்கு பின்னர் திருமணம் ஆகி அமெரிக்கா சென்ற நதியா, பத்து வருடங்கள் கழித்து 'எம்.குமரன் S/O மகாலட்சுமி' படத்தின் மூலம் திரும்பி வந்தாலும் அதே ஹீரோயின் லுக்குடன் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா:

டி.ராஜேந்தரால் 'மைதிலி என்னை காதலி' என்ற படத்தில் அறிமுகமான அமலா, முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அழகு தேவதை. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களோடு நடித்தார். தூங்காத விழிகள் ரெண்டு, வலையோசை கலகல போன்ற பாடல்களில் வரும் அமலாவை யாராவது மறக்க முடியுமா? கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து விலகியிருந்தாலும் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ரன்:

அஜித், விஜய் ஆகிய இருவருக்குமே பொருத்தமான நாயகியாக விளங்கிய சிம்ரன் சமீபத்தில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனால். விரைவில் திரைப்பட தயாரிப்பில் சிம்ரன் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா:

சிம்ரனை போலவே அஜித், விஜய்யின் ராசியான நாயகியாகிய இவர் சூர்யாவுடன் அதிக படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி அவருக்கு வாழ்க்கைத்துணையாகவும் மாறினார். பல வருடங்களுக்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகி மீண்டும் ரசிகர்களை கவர்ந்த நடிகை.

வித்யாபாலன்:

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் இதுவரை ஒரு தமிழ்ப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்ஸ்', கஹானி போன்ற படங்கள் இவருக்கு அழியாப் புகழை பெற்று தந்ததோடு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ஐஸ்வர்யாராய்:

கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் முதலில் அறிமுகமானது மணிரத்னம் இயக்கிய 'இருவர்' திரைப்படத்தில்தான். தமிழில் சில குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் பல வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். சில வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள ஐஸ்வர்யாராய், அதே பொலிவுடன் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்..

அனுஷ்கா ஷெட்டி:

2002ஆம் ஆண்டே 'இரண்டு' என்ற படத்தில் அறிமுகமானாலும் அனுஷ்காவை அனைவருக்கும் 'அருந்ததி'யில்தான் தெரிய ஆரம்பித்தது. அதன்பின்னர் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி' போன்ற படங்கள் இவருடைய குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

த்ரிஷா:

மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, சூர்யாவுடன் 'மெளனம் பேசியதே' படத்தில் 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். கிட்டத்தட்ட இவர் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டாலும் அதே இளமை மற்றும் பொலிவுடன் இன்றும் இளையதலைமுறை நடிகைகளுக்கு போட்டியாக நடித்து வருகிறார். கொடி, நாயகி, மோகினி, போகி, என கையில் பல படங்கள் கைவசம் வைத்துள்ள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா:

சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக அறிமுகமாகி சில வருடங்களுக்கு முன் திரையில் அறிமுகமாகிய ஆரி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர்களுக்கும் ஜோடியாக நடித்ததோடு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதுவழங்கும் விழாவில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சிறந்த நடிகை பட்டம் பெற்ற இவர் தற்போதும் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.

More News

First look of Tiger Shroff's 'A Flying Jatt' is here!

After all the action and breaking of bones 'Baaghi' actor Tiger Shroff is the youngest superhero in Bollywood. Confused!...will explain, Tiger Shroff is all set as the new Indian superhero for the movie - 'A Flying Jatt'. His first look from the movie is out and it was he who shared the good news to his fans.

Ashutosh Gowariker built 'Mohenjo Daro' set on 'Lagaan' ground

'Jodhaa Akbar' filmmaker Ashutosh Gowariker revisited the location where he had once filmed the movie 'Lagaan' in Bhuj. Sources say that, the movie 'Mohenjo Daro' had to be recreated into a pre-historical world, so Ashutosh build the magnum opus world of ‘Mohenjo Daro’ there. When the team visited the location, they were surprised to notice that it was the same place where ‘Lagaan's’ climax was sh

John Abraham on complete detox diet: Read Why?

'Rocky Handsome' actor John Abraham is a fitness freak when it comes to health. Recently, the news got viral that he had to let go of his strict routine for his character in 'Dishoom'. He will be seen in a role of a tough cop and had to smoke over 60 cigarettes a day during the shoot of the film.

Massive screen count details of 'Kabali'

Last week, IndiaGlitz had reported that Superstar Rajinikanth's 'Kabali' will be released across North India by the Fox Star India banner.

Hrithik Roshan & Pooja Hegde mesmerize in new 'Mohenjo Daro' song 'Tu hai': SEE PICS

The first song of Hrithik Roshan's much awaited action-romance 'Mohenjo Daro' is out and is simply a soulful romantic number. Sarman (Hrithik Roshan) gets disguised as a background dancer to woo Chaani (Pooja Hegde) in Mohenjo Daro's new song 'Tu hai'.