சூரரை போற்று: முதல்முறையாக நடுவானில் பாடல் வெளியீடு

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் 5 அப்டேட்டுக்கள் அடுத்தத்து இன்றும் நாளையும் வெளிவர இருப்பதாக வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இதன்படி தற்போது முதல் இரண்டு அப்டேட்கள் குறித்த தகவல் வந்துள்ளது

இதன்படி முதல் அப்டேட் ஆக இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அப்டேட் ஆக இந்த படத்தில் இடம்பெற்ற ’வெய்யோன் சில்லி’ என்ற பாடல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு திரைப்படத்தின் பாடல் நடுவானில் வெளியிடுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படம் விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்கள் வாழ்க்கை வரலாறு என்பதால் இந்த படத்தின் புரமோஷன் அனைத்துமே விமானம் சம்பந்தபட்டதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'சூரரை போற்று' படத்தின் தொடர்ச்சியான ஐந்து அப்டேட்டுக்கள்: குஷியில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்

டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள்: பாஜக தோல்வி குறித்து பிரபல நடிகர்

டெல்லியில் கடந்த 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன.

'தளபதி 65' குறித்த அட்டகாசமான தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த படத்திற்கு பாஜகவினர் மற்றும் வருமான வரித்துறையினர் இலவச விளம்பரம்

ரஜினிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது ஏன்? கருணாஸ் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என 66 லட்சம் வருமானவரி அலுவலகம் அபராதம் விதித்துள்ளது.

ரஜினி கட்சியுடன் கூட்டணியா? டாக்டர் ராமதாஸ் பதில் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும்