சூர்யா-கார்த்தி இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி: எங்கே தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சகோதரர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சூர்யா அளித்த பேட்டி உள்ளிட்டவை அடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுதான் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட முதல் செல்பி என்றும், கடந்த 2019ஆம் ஆண்டு இந்த செல்பி எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loved this tribute to the man who is my inspiration. #Suriya
— Actor Karthi (@Karthi_Offl) July 23, 2021
Happy birthday pa!https://t.co/wL3kQUUt1S
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com