வேற லெவல் சார் உங்க நடிப்பு.. 'மார்க் ஆண்டனி' படத்தின் முதல் விமர்சனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல திரைப்படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்த அதிதி ரவீந்திரநாத் என்பவர் தான் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல் விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது ’கடவுள் எல்லா நல்ல கதையையும் என்கிட்ட அனுப்புறியே’ என்று எஸ்ஜே சூர்யா பதிவு செய்த ட்விட்டை கோடிட்டு காட்டிய அதிதி ரவீந்திரநாத் ’நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை, வேற லெவல் சார் உங்க நடிப்பு, தெறிச்சிடிங்க’ என்று கூறியுள்ளார்.
அதே போல் விஷாலின் நடிப்பையும் பாராட்டியுள்ள அவர்,அவரது கேரக்டரில் சில சர்ப்ரைஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் அசத்தியுள்ளார் என்றும் தயாரிப்பாளர் வினோத்துக்கு தனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
@iam_SJSuryah sirrrrrr you are so correct ! #MarkAntony Vera level sir unga performance 🔥 therichitenga 🔥🙌 @VishalKOfficial too too good ( so many surprises ) @Adhikravi what a film, not one dull moment ! You killeddd it 🙌🙌🙌 only upwards from now 😎@gvprakash as always… https://t.co/A4yTJq1qGl
— Aditi Ravindranath (@aditi1231) August 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments