'மாமன்னன்' படத்தின் முதல் விமர்சனம்.. தனுஷ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனமாக இந்த படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி மிகப்பெரிய சர்ச்சைகளும் ஏற்பட்டது என்பதும் இந்த படம் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’மாமன்னன்’ திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம் என்றும் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர் என்றும் பகத் பாசில் கேரக்டர் மிகச் சிறந்த படைப்பு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைவேளைக்கு பின்னர் ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரம் செய்யப்போவது உறுதி என்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்கள் மிகவும் அழகாக இசையமைத்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

’மாமன்னன்’ திரைப்படத்தின் முதல் விமர்சனமாக தனுஷிடம் இருந்து பாசிட்டிவாக வந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு உள்ளது.