'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! முதல் விமர்சனம் தந்த பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம் ’கங்குவா' படத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன் என்று தனது சமூக வலைதளத்தில் முதல் விமர்சனமாக பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குவா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தைரியமாக ’கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பின்னணி இசை பணியை முடித்து விட்டதாக கூறிய நிலையில் தற்போது பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவு எதோ:
'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...
Feeling very proud to be a part of this great film!
'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
— Viveka Lyricist (@Viveka_Lyrics) July 1, 2024
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...
Feeling very proud to be a part of this great film!#Ganguva #surya #DirectorSiva #Dsp pic.twitter.com/q5IOdYWyHU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments