'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! முதல் விமர்சனம் தந்த பிரபலம்..!

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

சூர்யா நடித்த ’கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம் ’கங்குவா' படத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன் என்று தனது சமூக வலைதளத்தில் முதல் விமர்சனமாக பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குவா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தைரியமாக ’கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பின்னணி இசை பணியை முடித்து விட்டதாக கூறிய நிலையில் தற்போது பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவு எதோ:

'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!
இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்!
இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...
Feeling very proud to be a part of this great film!

 

More News

4 நாட்களில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் பிரமாண்டமான வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்கிவிடுமா?

பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் வசூல் செய்த தொகை

'லால் சலாம்', 'கோட்' படத்துடன் கனெக்சன் ஆனது 'இந்தியன் 2'.. என்ன செய்து வைத்திருக்கிறார் ஷங்கர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'கோட்' படங்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படம் கனெக்சன் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்.. டிரைலர் எப்போது?

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே

'வாணி ராணி' டிம்பிள் வீடு இதுதான்.. நீலிமா ராணி பதிவு செய்த எமோஷனல் வீடியோ..!

'வாணி ராணி' சீரியலில் டிம்பிள் என்ற கேரக்டரில் நடித்த நடிகை நீலிமா ராணி, ஏழு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் 'வாணி ராணி' படப்பிடிப்பு நடந்த வீட்டிற்கு சென்று எடுத்த வீடியோவை

காதல் மனைவியை கட்டிப்பிடித்து போஸ்.. பிரேம்ஜி - இந்துவின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் தற்போது பிரேம்ஜி - இந்து ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம்