'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் விமர்சனம்.. கெளதம் மேனனை வாழ்த்திய பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கௌதம் மேனன் உள்பட படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. இந்த படம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு படிப்படியாக இந்த படத்திற்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் சற்றுமுன் பிரபல இயக்குனர் லிங்குசாமி தனது சமூக வலைத்தளத்தில் ’துருவ நட்சத்திரம்’ படத்தை மும்பையில் பார்த்ததாகவும் படம் மிக அருமையாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகளை பார்த்து தான் அசந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விக்ரமின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் விநாயகன் இந்த படத்தில் அனைவரின் இதயத்தையும் திருடி விட்டார் என்றும் கூறியுள்ளார். அனைத்து நட்சத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர் என்றும் கௌதம் மேனன் அவர்கள் இந்த படத்தை ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ஒரு சிறப்பான படமாக கொடுத்துள்ளார் என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தின் முதல் விமர்சனத்தை லிங்குசாமி பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மேலும் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Happened to see the final cut of #DhruvaNatchathiram in mumbai & it was just fantastic. well made, visuals on par with the best.@chiyaan was so cool & #vinayakan stole everything in the movie. huge cast & everyone were brilliant. @menongautham congrats brother, u along with…
— Lingusamy (@dirlingusamy) November 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments