முதன்முதலில் ரஜினிக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார்:
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதன்முதலில் மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த போதே மதுரையைச் சேர்ந்த முத்துமணி என்பவர் ரஜினி ரசிகர் மன்றம் என்ற மன்றத்தை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் மற்ற நகரங்களில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரஜினி ரசிகர் முத்துமணி உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு போன் செய்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார் என்பதும் அவரது உடல் நலத்திற்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறினார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ரஜினி ரசிகர் முத்துமணி சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணி அவர்களை, தலைவர் ரஜினிகாந்த் இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். pic.twitter.com/IAKSGh8xel
— RIAZ K AHMED (@RIAZtheboss) September 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments