முதன்முதலில் ரஜினிக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார்:

  • IndiaGlitz, [Wednesday,March 09 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதன்முதலில் மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த போதே மதுரையைச் சேர்ந்த முத்துமணி என்பவர் ரஜினி ரசிகர் மன்றம் என்ற மன்றத்தை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் மற்ற நகரங்களில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஜினி ரசிகர் முத்துமணி உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு போன் செய்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார் என்பதும் அவரது உடல் நலத்திற்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ரஜினி ரசிகர் முத்துமணி சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
 

More News

கருப்பு காஸ்ட்யூமில் கவிதையாய் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்!

 'குக் வித் கோமாளி' சீசன் 2 வின்னர் கனி, தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.12.93 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

கோவையில் 3 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து நூதனமான முறையில் 12.93 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்டிருக்கும் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகளிர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

நேற்று மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது என்பதையும், திரை உலக பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்

ஷாலினி, ஷாமிலி, அனோஷ்கா மூவரும் அக்கா தங்கைகளா? ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள்!

நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து ஷாலினி தனது தங்கை ஷாமிலி மற்றும் மகள் அனுஷ்கோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக

பிரபல கிரிக்கெட் வீரரை சந்தித்த விஜய்டிவி புகழ்: வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், பிரபல கிரிக்கெட் வீரர் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்திற்கு சென்ற புகைப்படங்கள்