சினேகனுடன் 7 வருடங்களுக்கு முன் எடுத்த முதல் புகைப்படம்: கன்னிகா ரவி டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நடத்தி வைத்தார் என்பதும் தெரிந்ததே. இந்த திருமணத்திற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சினேகன் - கன்னிகா ரவி திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நடிகை கன்னிகா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முதன்முதலாக சினேகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எனது முதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது என்றும் கூறியுள்ள அவர் சினேகனுடன் கடந்த 2014ல் எடுத்து கொண்ட முதல் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும் கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியவில்லை என்றும், எனவே கோபம் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஏழு ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது??♀️??♂️
— கன்னிகா ரவி @Kannika Ravi (@KannikaRavi) July 31, 2021
முதல் புகைப்படம்?? 2014??
வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க?? கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்??
அன்புடன்
கன்னிகா சினேகன் #kannikaravi pic.twitter.com/esGBc2wAls
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments