காதலுக்கு பின் சினேகாவுடன் எடுத்த முதல் புகைப்படம்: பிரசன்னா
- IndiaGlitz, [Tuesday,May 03 2022]
தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா-சினேகா ஜோடியின் காதலுக்குப்பின் எடுத்த முதல் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா ஆகிய இருவரும் ’அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டனர். அதன்பின் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் பிரசன்னா-சினேகா தம்பதிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வரும் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் சினேகாவுடன் கொண்ட காதலுக்கு பின் எடுத்து கொண்ட முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.